கோவை : பட்டபகலில் வேலைக்கார பெண்ணை தாக்கி கொள்ளையர்கள் கைவரிசை

கோவை அருகே பட்டப்பகலில் வேலைக்கார பெண்ணை தாக்கி 40 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கோவை : பட்டபகலில் வேலைக்கார பெண்ணை தாக்கி கொள்ளையர்கள் கைவரிசை
x
கோவை அருகே பட்டப்பகலில் வேலைக்கார பெண்ணை தாக்கி 40 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கவுண்டம்பாளையம் அருகே என்.பி.சி. நகர் பகுதியில் வசிப்பவர் கார்த்திக்கின் வீட்டில் அவரது மனைவி ,குழந்தைகள் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சத்தியபாமா என்ற வயதான வேலைக்கார பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் மயக்கமடைந்த நிலையில் வீட்டிலிருந்த நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்