பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ 3.47 கோடி - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

அரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் மூன்றரை கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ 3.47 கோடி - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
அரூரை அடுத்த பையர் நத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலையில் இருந்து வந்த ஒரு பேருந்தை நிறுத்தி தீவிர சோதனை நடத்தப்பட்டது .பேருந்தில்  7 பைகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல், 3 கோடியே 47 லட்ச ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.அவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்  பணத்தை கொண்டு சென்ற செல்வராஜ் என்ற அரசு ஊழியரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட பணம் பின்னர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்