தேர்தல் ஆணையம் விதித்துள்ள பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் - சால்வை, மாலைகளை ஏற்க மறுப்பு

தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை கண்டு கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் விதித்துள்ள பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் - சால்வை, மாலைகளை ஏற்க மறுப்பு
x
தமிழகத்தில் வரும் 18 ந்தேதி நாடாளுமன்ற மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தேர்தல் செலவுகளுக்கு அதிகபட்சமாக 70 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மட்டன் பிரியாணி சாப்பிட்டால் 200 ரூபாய்க்குள்ளும் ,சிக்கன் பிரியாணி என்றால் 180 ரூபாய்குள்ளும் இருக்கவேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படும் பூசணிக்காய்க்கு 120 ரூபாயும், சேலைக்கு 200 ரூபாயும் , டீ சர்ட்டுக்கு 175 ரூபாயும், சால்வைக்கு  150 ரூபாயும் என தேர்தல் ஆணையம் விலை நிர்ணயம் செய்துள்ளது.சமூக வலைதளங்களில் பிரசார பதிவேற்றம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது இதனால் வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.இதனால், பிரசாரத்தின் போது தொண்டர்கள் சால்வை , மாலை அணிவிக்க வந்தால்  வேட்பாளர்கள் ஏற்க மறுத்து விடுகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்