99 வயதிலும் சேவை செய்யும் மருத்துவர்...

சேலத்தில் மூன்று ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கிய 99 வயதான மருத்துவர் ஒருவர் தற்போது வரை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறார்.
x
சேலம் நான்கு ரோடு அருகே உள்ள சத்திரம் பகுதியில் வசித்து வரும் மருத்துவர் அருணகிரி, நூறு வயதை எட்டும் நிலையிலும் ஓய்வெடுக்காமல் மருத்துவ சேவை புரிந்து வருகிறார். 99 வயதான அருணகிரி சேலம் அரசு மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகள் சம்பளமில்லாமல் மருத்துவ சேவை ஆற்றியுள்ளார். பின்னர் வெறும் மூன்று ரூபாய்க்கு தனது மருத்துவ சேவையை தொடங்கி, தற்போது 50 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வருகிறார். மனைவி இறந்து விட்ட நிலையில், தள்ளாடும் வயதிலும் மருத்துவ சேவையை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார். தனது இறுதிமூச்சு வரை மருத்துவ சேவையை தொடர்ந்து செய்வேன் என்று மருத்துவர் அருணகிரி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்