கொடநாடு தொடர்பாக பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரிக்கை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு
கொடநாடு தொடர்பாக பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரிக்கை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்
x
தேர்தல் பிரசாரத்தில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக பேச, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேசியதாக ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்