பள்ளிவாசல் அருகே வாக்கு சேகரித்த அ.தி.மு.க.வினர் - கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் திரும்பினர்

அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தொழுகை முடித்து விட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரம் அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுனர்.
பள்ளிவாசல் அருகே வாக்கு சேகரித்த அ.தி.மு.க.வினர் - கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் திரும்பினர்
x
மதுரை புதூர் பகுதியில் உள்ள பள்ளி வாசலில், அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர்  தொழுகை முடித்து விட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம்  துண்டு பிரசுரம் அளித்து  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுனர்.அப்போது சிலர்,  அ.தி.மு.க.விற்கு ஓட்டு சேகரிப்பதற்காக நீங்கள் இங்கே வரலாம் ஆனால், பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் நீங்கள் எப்படி இங்கே வந்து வாக்கு சேகரிக்கலாம் என்று குரலெழுப்பினர்.இதனால் பரபரப்பான நிலை ஏற்பட்டதை அடுத்து அ.தி.மு.க. வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்