சித்திரை திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் - சிறப்பு டி.ஜி.பி. தலைமையில் 6 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு 19ஆம் தேதியும் நடைபெறுகின்றது.
சித்திரை திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் - சிறப்பு டி.ஜி.பி. தலைமையில் 6 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை
x
மதுரையில் சித்திரை திருவிழாவின்  முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 18 ஆம் தேதியும், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு 19ஆம் தேதியும் நடைபெறுகின்றது.நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவும் 18 ஆம் தேதி நடைபெறுவதால்,மதுரை, தேனி, திண்டுக்கல்,சிவகங்கை,விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு அளிப்பது குறித்து, தமிழக காவல்துறை சிறப்பு டி.ஜி.பி விஜயகுமார் தலைமையில், மதுரை  மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது,தென் மண்டல  ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்  உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.சித்திரை திருவிழாவின் போது எவ்வளவு காவல்துறையினரை  பணியில் ஈடுபடுத்துவது ,எங்கெங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது மற்றும் போக்குவரத்தை மாற்றி அமைப்பது ,என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறுப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்