"ரத்தம் பராமரிக்கப்படுவது இல்லையா?" - மனித உரிமை ஆணையம் கேள்வி

முறையாக பராமரிக்கப்படாத ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரத்தம் பராமரிக்கப்படுவது இல்லையா? - மனித உரிமை ஆணையம் கேள்வி
x
முறையாக பராமரிக்கப்படாத ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளில் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அதில், ரத்த வங்கிகள் முறையாக பராமரிக்கப்படாமல், ரத்தம் காலாவதியானது தெரியவந்தது. இந்நிலையில், அந்த ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிகள் 15 பேர் மரணமடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, தினந்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 


Next Story

மேலும் செய்திகள்