திருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு : 6 சுயேட்சைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

6 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படாததால் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
திருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு : 6 சுயேட்சைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
x
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில்   திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன்,அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனை மாவட்ட தேர்தல் அதிகாரி சிவராசு தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர் அமீத்குமார் முன்னிலையில் நடைபெற்றது.  பரிசீலனைக்கு பின் திருநாவுக்கரசர், இளங்கோவன்,மக்கள் நீதி மய்யம் ஆனந்த ராஜா, நாம் தமிழர் வினோத், சாருபாலா தொண்டைமான் ஆகியோர் உள்ளிட்ட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.6 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படாததால் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்