பாஜகவுக்கு எதிராக துண்டுப் பிரசுரம் வழங்கிய மாணவர் கைது : விசாரணைக்கு பிறகு மாணவர் ஜாமினில் விடுவிப்பு
மன்னார்குடியில் துண்டுபிரசுரம் வழங்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது
பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க கூடாது என மன்னார்குடியில் துண்டுபிரசுரம் வழங்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது.அரசு கல்லூரியில் படிக்கும் அந்த இளைஞர்,கல்லூரி வளாகத்தில் சக மாணவ மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கியுள்ளார்.அதில், பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என்றும், அதற்கான காரணங்கள் குறித்தும் எழுதப்பட்டிருந்தது.பொதுமக்களுக்கும் இந்த பிரசுரங்கள் வழங்கப்பட்ட நிலையில், தகவலறிந்து வந்த போலீசார், அந்த மாணவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.
Next Story