சேலத்தில் மாயமான பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

சேலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர், தலையில் தாக்கப்பட்டு அழுகிய நிலையில், பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் மாயமான பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
x
சேலம் மாவட்டம் பெரியபுத்தூர் கிராமத்தை சேர்நவர் பாப்பாத்தி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த பாப்பாத்தி, சேலம் அன்னதானபட்டி அருகே எஸ்.கே.கார்டன் பகுதியில் உள்ள மாவு மில்லில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு மாவு மில் உரிமையாளர் ரவிக்கும், பாப்பாத்திக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பாப்பாத்தி வீடு திரும்பாத‌தை அடுத்து அவரது உறவினர்கள் மாவு மில்லுக்கு சென்று விசாரித்துள்ளனர். மாவு மில் உரிமையாளர் ரவி, 2 நாட்களாக பாப்பாத்தி வேலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாவு மில்லில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சோதனையிட்டபோது, அங்கு பாப்பாத்தி அழுகிய நிலையில் சடலாக கிடந்த‌து தெரிய வந்துள்ளது. பாப்பாத்தியின் தலையில் காயங்கள் இருப்பதால் அவரை யாரேனும் கொலை செய்திருக்க கூடும் என சந்தேகம் அடைந்த போலீசார், மற்றொரு அறையில் மது போதையில் மயங்கி கிடந்த உரிமையாளர் ரவியை பிடித்து விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்