தக்கலை : வேளிமலை குமாரகோவில் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த வேளிமலை குமாரகோவில் முருகபெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி குறவர் படுகளம் நடைபெற்றது.
தக்கலை : வேளிமலை குமாரகோவில் திருக்கல்யாண விழா
x
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த வேளிமலை குமாரகோவில் முருகபெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி குறவர் படுகளம் நடைபெற்றது. மலையிலிருந்து வள்ளிதேவியுடன் முதியவர் வேடத்தில் முருக பெருமான் கோயிலை நோக்கி செல்லும்போது, வள்ளி தேவியின் உறவினர்களான குறவர்கள் பல்வேறு வேடமணிந்து முருகனை தடுப்பதும் அவர்களுடன் முருக பெருமான் சண்டையிட்டு வெற்றி பெற்று இறுதியில் தனது உண்மை வடிவத்தை வெளிக்காட்டும் கதையை சித்தரிக்கும் விதமான நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆண்டாள் கோவில் திருக்கல்யாண உற்சவ விழா 



ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்திருக்கல்யாண உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 13ம் தேதி திருக்கல்யாண உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கல்யாண உற்சவத்தின்  நிறைவையொட்டி புஷ்ப யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் முன்னதாக ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. 

அக்னி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா



நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த  நன்செய் இடையாறு அக்னி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமானோர் தீ மிதித்து வழிபட்டனர். தமிழகத்திலேயே மிகப்பெரிய பூக்குழியாக கருதப்படும் 63 அடி நீள பூக்குண்டத்தில் முதலில் கோவில் பூசாரி இறங்கினார். இதனைத்தொடர்ந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் தீ மிதித்தும், பெண்கள் தலையில் பூவாரி போட்டுக்கெண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.   

Next Story

மேலும் செய்திகள்