2 இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து : நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
திருவள்ளுர் செங்குன்றத்தில் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அங்குள்ள பாலவாயல் சந்திப்பில் சென்ற போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தறிக்கட்டு ஓடிய லாரி, எதிரே வந்த 2 இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.
திருவள்ளுர் செங்குன்றத்தில் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அங்குள்ள பாலவாயல் சந்திப்பில் சென்ற போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தறிக்கட்டு ஓடிய லாரி, எதிரே வந்த 2 இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஒரு வாகனத்தில் வந்த ஜான்சன் மற்றும் சந்திரபாபு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் மற்றொரு வண்டியில் வந்த சுஜீத் என்பவரும் லேசான காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த லாரி ஒட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நெஞ்சை பதைபதைக்கும் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
Next Story