கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

துப்பாக்கி பறிமுதல் - போலீசார் தீவிர விசாரணை
கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது
x
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.நாடுகண்டானூர்  என்ற ஊரில்  ஒருவர் கள்ள துப்பாக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி, காவல்துறை துணை ஆய்வாளர் தர்மேந்திரா மற்றும் தனிப்படை போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து முருகன் என்பவர் பதுக்கி வைத்திருந்த நீள துப்பாக்கியை, போலீசார் பறிமுதல் செய்து, வடமதுரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்