போலீசுக்கு பயந்து குளத்தில் குதித்த இளைஞர் : நீண்ட தேடுதலுக்குப் பின் பிணமாக மீட்பு

சக்திவேல் மீது தேர்தல் முன்னெச்சரிக்கை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
போலீசுக்கு பயந்து குளத்தில் குதித்த இளைஞர் : நீண்ட தேடுதலுக்குப் பின் பிணமாக மீட்பு
x
புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகரைச் சேர்ந்த சுகுமார்,தனது நண்பரான சக்திவேல் உள்ளிட்டோருடன்அப்பகுதியில் உள்ள குளத்தருகே பேசிக்கொண்டிருந்தார்.சக்திவேல் மீது தேர்தல் முன்னெச்சரிக்கை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் போலீசார் தங்களை பிடிக்க வருவதாக எண்ணிய அவர்கள் அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளனர்.அப்போது குளத்தில் குதித்த சுகுமார் நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கினார்.இதையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரமாக தேடிய நிலையில், சுகுமார் பிணமாக மீட்கப்பட்டார்

Next Story

மேலும் செய்திகள்