பழனி : கார் விபத்தில் சிக்கிய மலேசிய சிறுவன்
பழனி அருகே கார் விபத்தில் காயமடைந்த மலேசிய சிறுவனின் சிகிச்சைக்கு காவல் உதவி ஆய்வாளர் உதவி புரிந்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருகே கார் விபத்தில் காயமடைந்த மலேசிய சிறுவனின் சிகிச்சைக்கு காவல் உதவி ஆய்வாளர் உதவி புரிந்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் மலேசியாவை சேர்ந்த ஈஸ்வரி, கார் ஓட்டுனர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஈஸ்வரியின் மகன் தேவனாந்த் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்ல நேர்ந்தது. இதனையடுத்து சிறுவனை கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ள பழனி டவுன் காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித், மருத்துவ செலவையும் ஏற்றுள்ளார். மேலும், சிறுவனின் உறவினர்கள் என யாரும் இல்லாத நிலையில் அவரே மருத்துவமனையில் தங்கி இருந்து சிறுவனை பார்த்து வருகிறார்.
Next Story

