வடசென்னை வேட்பாளர் அறிமுக கூட்டம் : வெளிநடப்பு செய்த த.மா.கா

வடசென்னை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இருந்து, தமிழ் மாநில காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது.
வடசென்னை வேட்பாளர் அறிமுக கூட்டம் : வெளிநடப்பு செய்த த.மா.கா
x
வடசென்னை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இருந்து, தமிழ் மாநில காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது. வடசென்னை நாடாளுமன்ற தொகுதி, தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜின் அறிமுக கூட்டம் ஓட்டேரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மோகன்ராஜ் மண்டபத்திற்கு உள்ளே வரும் போது, தங்களது தலைவருக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்று கூறி த.மா.கா தொண்டர்கள் அவரை சூழ்ந்து கோஷமிட்டனர். மோகன்ராஜூம் பதில் கூறாமல் கூட்டத்திற்கு உள்ளே சென்றார். இது குறித்து கருத்து தெரிவித்த தமாகா வடசென்னை மாவட்ட செயலாளர் பி.ஜி.சாக்கோ, உரிய மரியாதை கிடைக்கவில்லை எனில், வடசென்னையில் ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று கூறி தொண்டர்களுடன் வெளிநடப்பு செய்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்