பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன

கடலூர் அருகே பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள், பூக்கள் தூவி கடலில் விடப்பட்டன.
பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன
x
கடலூர் அருகே பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள், பூக்கள் தூவி கடலில் விடப்பட்டன. அரியவகை இனமாக கருதப்படும் இந்த ஆமைகள், ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடலோரத்தில் ஆயிரக்கணக்கில் முட்டைகளை இட்டுச் செல்கின்றன. காகம், நாய், நரி உள்ளிட்டவைகளிடம் இருந்து பாதுகாக்கப்படும் முட்டைகள் பொறிக்க வைக்கப்படுகின்றன. அவற்றை பாதுகாத்து வரும், தமிழக கடலோர பாதுகாப்புப் படை, வனத்துறை மற்றும் மீன் வளத்துறை இணைந்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அந்த வகையில் பொறிக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலுக்குள் நீந்திச் சென்றன.

Next Story

மேலும் செய்திகள்