மார்ச் 21 - வரை வாகன சோதனையில் ரூ.5.21 லட்சம் பறிமுதல் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்

மார்ச் 21 ஆம் தேதி வரை, 5 கோடியே 21 லட்சம் ரூபாய் பிடிபட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்
மார்ச் 21 - வரை வாகன சோதனையில் ரூ.5.21 லட்சம் பறிமுதல் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்
x
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளில் நடைபெற உள்ள இடை தேர்தலுக்கான ஏற்பாடுகள், பறக்கும் படையினர் செயல்பாடுகள் குறித்து பேசினார்.அப்போது,நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரை 49 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும்,சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு, இது வரை 8 பேர் சுயேட்சையாக வேட்பு மனு செய்துள்ளதாக தெரிவித்தார்.தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறியதாக இது வரை 148 வழக்குகள் பதிவானதாகவும், நேற்று வரை பறக்கும் படையினரால் 5 கோடியே 21 லட்ச ரூபாய் பிடிபட்டுள்ளதாக அவர் கூறினார்.கரூரில் பிடிபட்ட 94 கிலோ தங்கம் முறையான ஆவணங்களை சமர்ப்பித்ததால் திரும்பி ஒப்படைக்கப்பட்டதாக சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்