ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு மேற்கொண்டனா்
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு
x
சென்னை புளியந்தோப்பு ஸ்டிபன்சன் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். ஹோலி பண்டிகையை முன்னிட்டு அங்கு பெரும்பாலோனோர் பல வண்ணப்பொடியை தூவி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற திரு.வி.க நகா் தொகுதி தேர்தல் உதவி அலுவலா் விஜயா உள்ளிட்ட 30 தேர்தல் அலுவலர்கள், வாக்களிக்கும் இயந்திரம் குறித்தும் விளக்கம் அளித்து, 100 சதவிகிதம் வாக்கினை உறுதி செய்யும் பொருட்டு உறுதி மொழி மேற்கொண்டனா். பின்னர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசார துண்டு சீட்டுகளை வழங்கி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்