ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா - பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் பூப்பல்லக்கிலும், ஸ்ரீரங்க மன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா - பக்தர்கள் தரிசனம்
x
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் பூப்பல்லக்கிலும், ஸ்ரீரங்க மன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இறுதியில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய, ஆண்டாளை தங்க குதிரை வாகனத்தில் ரங்க மன்னார் மூன்று முறை வலம் வரும் வையாளி சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான திருக் கல்யாண விழா இன்று  இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

மகாமக குளத்தில் நடைபெற்ற தெப்பத்திருவிழா - ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவிலில் நடைபெற்ற தெப்ப திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். லட்சுமி மற்றும் கலைமகள் கவரி வீச, மலைமகளாகிய மங்களாம்பிகை மகாமக குளத்தில் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்கு கரைகளிலும் திரண்டு நின்ற பக்தர்கள் நள்ளிரவில் மின்விளக்கு அலங்காலத்தில் தெப்பத்தில் உலா வந்த அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த கோவில் தேரோட்டம் - தேரை வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு


கிருஷ்ணகிரி மாவட்டம் தேவனதொட்டியில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ சிவ லிங்கேஸ்வரா, ஸ்ரீவீரபத்திர மற்றும் ஸ்ரீ சனீஸ்வர சுவாமி திருக்கோயில் தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களை எழுப்பியபடி வடம் பிடித்து தேரை முன்னோக்கி இழுத்தனர். தேரோட்டத்தின் போது பாரம்பரிய வாத்திய கருவிகள் இசைக்கப்பட்டன.  இந்த தேர்த் திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்