மயிலம் தேரோட்டம் : வடம்பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோயில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
மயிலம் தேரோட்டம் : வடம்பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்
x

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேருக்கு முன்பாக, வாத்திய இசைக் கருவிகள் முழங்க, பக்தர்கள் நடனமாடினர்.


உடம்பில் சேறு பூசி வினோத நேர்த்திக்கடன்


 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வினோதமாக நேர்த்திக்கடன் செலுத்தினர்.உடல் முழுவதும் சேறு பூசியவாறு, கோயிலுக்கு ஊர்வலமாக சென்று, நேர்த்திக்கடன் செலுத்தும் இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நிறைவு

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து சென்றனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள்  முத்துமாரியம்மன் கோயிலை சுற்றி வழிபட்டனர். 




Next Story

மேலும் செய்திகள்