சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி

திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
x
நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம்,விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஆந்திராவில் குண்டூர், சித்தூர், விசாகப்பட்டினம், திருப்பதி, ராஜம்பேட், கடப்பா ஆகிய 6 தொகுதிகளிலும், கேரளாவில் இடுக்கி,கோட்டயம், கொல்லம் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக  திருமாவளவன் அறிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்.மேலும்,தமிழகத்தில் சிதம்பரம் தொகுதியில் தானும்,விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்