தடுமாறி குழிக்குள் விழுந்த யானை - வனத்துறையினர் கிரேன் மூலம் பத்திரமாக மீட்பு

பொள்ளாச்சியில் கோவில் திருவிழாவிற்கு வந்த யானை ஒன்று தவறி குழிக்குள் விழுந்த நிலையில், அதனை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் மீட்டுள்ளனர்
தடுமாறி குழிக்குள் விழுந்த யானை - வனத்துறையினர் கிரேன் மூலம் பத்திரமாக மீட்பு
x
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர், குலாபி என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார்.இந்த யானையை, பொள்ளாச்சியில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு, கஜ பூஜைக்காக, லாரி மூலம் கொண்டு வந்தனர். மகாலிங்கபுரம்  பகுதியில் லாரியில் இருந்து யானையை இறக்கும் பொழுது நிலை தடுமாறிய யானை சாலையில் இருந்த குழியில் விழுந்தது.யானை எழுந்திருக்க முடியாமல் சிரமத்திற்குள்ளானது குறித்து தகவலறிந்த வனத்துறையினரும், பொதுமக்களும் கிரேன் மூலம் பத்திரமாக மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்