ஜாமின் கிடைத்தும் சிறையில் நிர்மலாதேவி: வரும் 19ல் நிர்மலாதேவி வெளியே வருவார் என தகவல் - வழக்கறிஞர்

பேராசிரியர் நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைத்தும், உத்தரவாதம் அளிக்க குடும்பத்தினர் முன்வராததால் மதுரை சிறையிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
x
மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு, 11 மாத சட்டப்போராட்டத்திற்கு பிறகு கடந்த நான்கு தினங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியுள்ளது. ஆனால், ஜாமினுக்கான ஆவணத்தில் ரத்த சொந்த உறவுகள் மற்றும் நண்பர்கள் கையெழுத்திட முன்வராததால் சிக்கல் ஏற்பட்டது. தற்போது, அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஒருவர் ஜாமின் உத்தரவாதம் அளிக்க முன்வந்துள்ளதாக நிர்மலாதேவியின் வழக்கறிஞர்  பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற நடைமுறைகளெல்லாம் முடிந்த பின்பு, வருகிற 19ஆம் தேதி நிர்மலாதேவி மதுரை சிறையிலிருந்து வெளியே வருவார் என அவர் கூறினார். மேலும், நிர்மலாதேவிக்கும், அவருக்கு உதவி செய்பவர்களுக்கும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை மிரட்டல் விடுப்பதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்