ரூ.50 லட்சம் மோசடி : ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைது

எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ரூ.50 லட்சம் மோசடி : ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைது
x
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நிசார் அஹமது. இவர் 2013-ம் ஆண்டு தனது மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதற்காக அப்போதைய போக்குவரத்து துறை துணை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மோகன்ராஜ் மற்றும் அவரது உதவியாளர் செல்வகுமாருக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தராததால், நிசார் அகமது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது அவர்கள் கொடுத்த 2 காசோலைகளும் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் பவுன்ஸ் ஆனதை தொடர்ந்து நிசார் அகமது உயர்நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி 2015-ஆம் தேதி மோகன்ராஜ் மற்றும் செல்வகுமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, மோகன்ராஜை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாகவும் இவர் மீது மற்றொரு வழக்கு, பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மலேசியாவிற்கு தப்பி சென்ற மோகன்ராஜின் உதவியாளர் செல்வகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்