பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
x
பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி வீடியோவாக எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட 4 பேர் மீது பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவு செய்து உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பியிருந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்ட வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்