நியூட்ரினோ வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனு மீது மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூட்ரினோ வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
x
தேனியில் மத்திய அரசு அமைக்க இருக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை இல்லை என்று தெரிவித்திருந்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பாலி நரிமன் மற்றும் வினித்சரண் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த விசாரணையின் போது நியூட்ரினோ ஆய்வு மையத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் தங்கள் பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்