வியக்க வைத்த ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி...

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
x
சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில்  ராணுவ அதிகாரிகளின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நாளை ராணுவ  அதிகாரிகள் தங்களது பயிற்சியை முடிக்க உள்ளனர். 30 பெண்கள், 18 வெளிநாட்டினர் உள்ளிட்ட 140 வீரர்கள் இந்த பயிற்சியை முடித்துவிட்டு வெளியேறுகின்றனர்.  இதனை முன்னிட்டு  ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குதிரை ஓட்டம், பாராசூட் சாகசம், களரி, நெருப்பு வளையத்தை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு  சாகசங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்