குரூப்-1 தேர்வு-12 வினாக்களுக்கான விடை தவறு - திருத்திய விடைகளை வெளியிட கோரிக்கை

குரூப்-1 முதல்நிலை தேர்வில் 12 கேள்விகளுக்கான விடைகள் தவறாக தரப்பட்டிருந்ததாக தேர்வு எழுதியவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குரூப்-1 தேர்வு-12 வினாக்களுக்கான விடை தவறு - திருத்திய விடைகளை வெளியிட கோரிக்கை
x
உதவி ஆட்சியர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் நடந்தது. ஒரு லட்சத்து 67 ஆயிரத்த 490 போ் இந்த தோ்வை எழுதியுள்ளனர். இதற்கான விடைத்தாளை கடந்த திங்கள்கிழமையன்று தேர்வாணையம் வெளியிட்டது.அதில் 12 கேள்விகளுக்கான விடைகள் தவறாக தரப்பட்டிருப்பதாக தேர்வு எழுதியவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தவறான விடைகளை திருத்தம் செய்து, புதிய விடைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்