பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் : சமூக வலைத்தளத்தில் பரவி வரும் சிசிடிவி காட்சிகள்

தஞ்சை மாவட்டம், மனோஜிபட்டியில், பெட்ரோல் போட்டதற்கு பணம் கேட்டதற்காக ஊழியர் ஒருவரை, இளைஞர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் : சமூக வலைத்தளத்தில் பரவி வரும் சிசிடிவி காட்சிகள்
x
தஞ்சை மாவட்டம், மனோஜிபட்டியில், பெட்ரோல் போட்டதற்கு  பணம் கேட்டதற்காக ஊழியர் ஒருவரை, இளைஞர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்க்கில் ஊழியராக பணிபுரியும் அன்பு என்பவரிடம், சந்திரகுமார் என்ற இளைஞர் பெட்ரோல் போட வந்துள்ளார். பெட்ரோல் போட்டு விட்டு, சந்திரகுமார் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், கத்தியை எடுத்து தாக்கியதோடு, பெட்ரோல் பங்கையும் சந்திரகுமார் சூறையாடி உள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள், சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து தஞ்சை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்