ரூ.2000 நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து மாட்டிக்கொண்ட பட்டதாரி பெண்...

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து புழகத்தில் விட்டு பரிசோதனை செய்து மாட்டிக்கொண்ட பட்டதாரி பெண்.
x
கடலூர் பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வரும் குமுதா என்பவரிடம் பழங்கள் வாங்கிய பெண் ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். ரூபாய் நோட்டை வாங்கிய குமுதாவிற்கு சந்தேகம் ஏற்பட, சில்லரை வாங்கி வரும் வரை காத்திருக்குமாறு அந்த பெண்ணிடம் கூறிவிட்டு, அருகில் இருந்த காவல் நிலையத்தில் அந்த ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். உடனே விரைந்து சென்ற போலீசார் பேருந்து நிலையத்தில் இருந்த அந்த பெண்ணை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். 36 வயதான பரணிகுமாரி என்ற அந்த பெண் சிதம்பரத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவரது கைப்பையை சோதனை செய்ததில் 66 ஆயிரம் மதிப்பிலான கள்ள இரண்டாயிரம் நோட்டுகள் 33 இருந்ததை கண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பொறியியல் மற்றும் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்துள்ள பரணிகுமாரி கணவரை பிரிந்து வாழ்கிறார். கடன் தொல்லை காரணமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து அதனை மாற்ற முயற்சி செய்துள்ளார். YOUTUBE-ல் கள்ள நோட்டு அச்சடிப்பதை பார்த்து இதை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிதாக சிறிய ஜெராக்ஸ் கருவியை வாங்கி வீட்டில் வைத்து ரூபாய் நோட்டை 100 முறை ஜெராக்ஸ் எடுத்ததில், 33 நோட்டுகள் மட்டுமே சரியாக வந்ததாகவும், அதனை புழக்கத்தில் விட்டு சோதனை முயற்சி செய்து போது மாட்டிக்கொண்டதாக பரணிகுமாரி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் கள்ளநோட்டு தயாரிக்க அவர் உபயோகித்த ஜெராக்ஸ் கருவி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.  கள்ள நோட்டை கண்டுபிடித்த பழ வியாபாரி குமுதாவை காவல்துறையினர் பாராட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்