தர்மபுரி - மொரப்பூர் புதிய ரயில் பாதை திட்டம் : அடிக்கல் நாட்டினார் பியூஷ் கோயல்

தர்மபுரி - மொரப்பூர் புதிய ரயில்பாதை திட்டப்பணிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் அடிக்கல் நாட்டினார்.
தர்மபுரி - மொரப்பூர் புதிய ரயில் பாதை திட்டம் : அடிக்கல் நாட்டினார் பியூஷ் கோயல்
x
தர்மபுரி - மொரப்பூர் புதிய ரயில்பாதை திட்டப்பணிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்திற்கு 358 கோடி  ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை- கொல்லம் இடையேயான தினசரி ரயில் சேவை, நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்ட அந்தியோதயா ரயில் சேவையையும், பியூஷ் கோயல் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி மற்றும் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அன்புமணி மகிழ்ச்சி

தர்மபுரி - மொரப்பூர் புதிய ரயில்பாதை திட்டம்,  தர்மபுரி மக்களின் நீண்டநாள் கனவு என்றும், இதற்காக பல முறை தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தர்மபுரி எம்.பி.யும் பா.ம.க. இளைஞரணி தலைவருமான அன்புமணி தெரிவித்தார். தற்போது இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்