"11 மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும்" - சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் 11 மாவட்டங்களில், அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
11 மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் - சென்னை வானிலை மையம்
x
தமிழகத்தின் 11 மாவட்டங்களில், அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், பகல் நேர வெப்பநிலை, இரண்டு முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வளி மண்டலத்தில் காற்றின் சுழற்சி இல்லாததாலும், நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்கில் இருந்து வரும் வெப்பக் காற்றால், தமிழக வானிலையிலும் வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்