அனல் மின் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் பியூஷ் கோயல்

தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் துவக்கி வைத்தார்
அனல் மின் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் பியூஷ் கோயல்
x
தூத்துக்குடியில் என்எல்சி மற்றும் தமிழ்நாடு மின் நிறுவனம் இணைந்து 500 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு யூனிட்களை அமைத்துள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டு இதற்கான அடிக்கல்லை அப்போதைய வெளியுறவுத்துறை மற்றும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாட்டினார்.தமிழகத்தின் மிக அதிக மின் உற்பத்தி திறன்கொண்ட இந்த அனல் மின் நிலையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று திறந்து வைத்தார்.இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது தமிழகம், கர்நாடகா,கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.இதன் மூலம் தமிழகத்திற்கு 427 மெகாவாட் மின்சாரம் கிடைக்க உள்ளது. மேலும் திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக 200 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின் திட்டத்தையும் அமைச்சர் துவங்கி வைத்தார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Next Story

மேலும் செய்திகள்