தண்ணீர் பஞ்சம் : ஒரு குடம் தண்ணீர் ரூ 15

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
x
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ரேலியா அணையில் போதிய நீர் இருப்பில் இருந்தும், 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நீண்ட தூரம் சென்று வாகனம் மற்றும் தள்ளுவண்டி மூலம் நீரோடைகளில் தண்ணீர் எடுத்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சிலர், ஒரு குடம் நீரை 15 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி குடிநீரை பயன்படுத்தி வருவதாக கூறிய மக்கள், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்