சங்கரன்கோவில் பட்டாசு விபத்து : பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆறுதல்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வரகனுரில், 2 நாட்களுக்கு முன் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
சங்கரன்கோவில் பட்டாசு  விபத்து : பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆறுதல்
x
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வரகனுரில், 2 நாட்களுக்கு முன் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆறுதல் கூறினார்கள். கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் மற்றும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்கள் வசந்த குமார், டாக்டர் ஜெயக்குமார், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நேரில் ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், அரசு வழங்கிய ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் போதாது எனவும் 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அரசிடம் கூடுதலாக நிவாரண நிதி பெற, காங்கிரஸ் கட்சி உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்