நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தினகரன் - அமைச்சர் ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இடையே மட்டுமே நேரடி போட்டி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இடையே மட்டுமே நேரடி போட்டி என்று  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, ராயபுரம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தும், தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.  பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக  தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்