குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது - ஸ்டாலின்

தமிழகத்தை பொருத்தவரையில் ராகுல்காந்தி தான் நாங்கள் எதிர்பார்க்கும் பிரதமர் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தை பொருத்தவரையில் ராகுல்காந்தி தான் நாங்கள் எதிர்பார்க்கும் பிரதமர் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய  ஸ்டாலின், மத்தியில் மோடியின் ஆட்சியையும் மாநிலத்தில் எடப்பாடி
பழனிசாமியின் ஆட்சியையும் அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள் என்றார். கருணாநிதி மரணம் அடைந்த பிறகு அவருக்கு பல இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட ஸ்டாலின், ஆனால்,  ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அந்த கட்சியினர் இதுவரை ஒரு இரங்கல் கூட்டம் நடத்தியது உண்டா? என கேள்வி எழுப்பினார்.



Next Story

மேலும் செய்திகள்