முகநூலில் நபிகள் நாயகம் பற்றி கருத்து : பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமனுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்

முகமது நபிகள் பற்றி முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமன் ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
முகநூலில் நபிகள் நாயகம் பற்றி கருத்து : பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமனுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்
x
முகமது நபிகள் பற்றி முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமன் ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை தெரிவிப்பது வேறு எனவும், மதத்தில் கடவுள்களாக வழிபடக் கூடியவர்களின் வாழ்க்கையை முழுமையாக படித்து, அதை பதிவிடுவது வேறு  என்றும், அது அவதூறாகாது எனவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை படித்து, தன் புரிதலை கல்யாணராமன்,  பதிவிட்டுள்ளாரே தவிர, அவதூறு கருத்து எதையும் பதிவிடவில்லை என தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், கல்யாணராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்