அடமான நகையை திருப்பித் தராத வங்கி : 84 வயது முதியவர் தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்த விவசாயி அழகர். 84 வயதான இவர் மருங்காபுரி ஐஓபி வங்கியில் நகையை அடமானமாக வைத்து 90 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
x
இந்நிலையில் அந்த நகைக்கு வங்கி ஏல நோட்டீஸ்  அனுப்பியதால்,  வட்டியுடன் சேர்த்து 1 லட்சத்து 13 ஆயிரத்து 892 ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட வங்கி அதிகாரிகள், நகையை திருப்பி தர மறுத்ததுடன், ஏற்கனவே உள்ள கரும்பு கடனுக்கான தொகையை செலுத்துமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, வங்கி முன்பு அவர் பெட்ரோல் ஊற்றி  தீக்குளிக்க முயன்றார். தகவலறிந்து வந்த போலீசார்  பேச்சுவார்த்தை நடத்தியும், கரும்பு கடன் தொகை 5 ஆயிரத்தை செலுத்தினால் மட்டுமே  நகையை திருப்பி தருவோம் என வங்கி அதிகாரிகள் கூறியதால்,   விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்