தனியார் பள்ளியில் ஆசிரியை வெட்டி கொலை : ஒருதலை காதலால் கொடூரம்
பதிவு : பிப்ரவரி 22, 2019, 01:47 PM
தனியார் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் ரம்யா, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை பள்ளிக்கு சென்ற ஆசிரியை ரம்யா, வளாகத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ரம்யாவை தாக்கியதுடன், ஆட்டை அறுப்பதை போல் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். 

இதில் ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆசிரியை ரம்யாவை ஒருதலையாக காதலித்து வந்த விருத்தாசலத்தை சேர்ந்த ராஜசேகர், இந்த கொலையை செய்தது போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ரம்யாவை வீட்டுக்கு நேரடியாக சென்று பெண் கேட்ட ராஜசேகர், தர மறுத்ததால், ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிகிறது. தலைமறைவான அவரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

772 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4821 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6138 views

பிற செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்தார் கனிமொழி

திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

41 views

கோவை மக்களவை தொகுதியில் சி.பி. ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல்

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

24 views

ராணுவ வீரர் உடல் திருமங்கலம் வருகை

ராணுவ வீரர் பால்பாண்டி என்பவர் கண்காணிப்பு கோபரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

30 views

பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது

23 views

விஸ்வாசம் 75- வது நாள் கொண்டாட்டம்

விஸ்வாசம் திரைப்படம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக 75 - நாள் ஓடி சாதனை படைத்துள்ளது

14 views

3 மொழிகளில் வெளியாகும் சாய் பல்லவி படம்

பிரேமம் படம் புகழ் சாய் பல்லவி மலையாளத்தில் பஹத் பாசிலுடன் அதிரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.