பல துறைகளில் சாதனை படைத்த 9 பெண்கள் : "தங்க தாரகை" விருதுகள் வழங்கி கௌரவிப்பு
பதிவு : பிப்ரவரி 22, 2019, 01:04 AM
பல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இலக்கியம், வர்த்தகம், அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், தொழில்துறை பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் இலக்கியத்திற்காக எழுத்தாளர் பாமாவுக்கும்,  ஆன்லைன் வர்த்தகத்தில் சாதனை படைத்ததற்காக அருள் மொழி சரவணனுக்கும், வர்த்தகத்தில் சாதித்ததற்காக ஸ்ரீராம் ஆயுள் காப்பீடு 
நிறுவன மேலாண் இயக்குனர் டாக்டர் அகிலா சீனிவாசனுக்கும் தங்க தாரகை விருது வழங்கப்பட்டது.

இதுபோல, பள்ளி மாணவர்களும் நாசாவுக்கு செல்லலாம் என்ற நிலையை உருவாக்கிய, Space kidz india இயக்குனர் ஸ்ரீமதி கேசனுக்கு அறிவியல் துறையிலும், மாற்று திறனாளிகளுக்காக கூடைப்பந்து பயிற்சி மையத்தை உருவாக்கியுள்ள மாதவி லதாவுக்கு  விளையாட்டு துறையிலும் விருது வழங்கப்பட்டது. பாதாள சாக்கடையில் வீசப்பட்ட  குழந்தையை மீட்டு வளர்த்த துணை நடிகை கீதாவுக்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது. 
விழாவில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகை கீதாவுக்கு அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வேலைக்கான ஆணையை இ மெயில் மூலமாக அனுப்ப உத்தரவிட்டார். 

குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி  அமுதாவுக்கும், பொழுதுபோக்கு துறையில் கிராமிய பாடகி ராஜலட்சுமி மற்றும் நடிகை ஜஸ்வர்யாவுக்கும் வாழ்நாள் சாதனையாளராக பின்னணி  பாடகி சித்ராவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1207 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4595 views

பிற செய்திகள்

கொடைக்கானல் : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டப்பட்ட கட்டடங்களை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

9 views

சத்தியமங்கலம் : லேப்டாப் வழங்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-18 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படித்த 450 மாணவிகளுக்கு இதுவரை லேப்டாப் வழங்கப்படவில்லை.

8 views

நெல்லை : லேப்டாப் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டம்

நெல்லை கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை.

15 views

அமமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை

தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசிய விவகாரம் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்.

42 views

"அடுத்த 5 தினங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில், அடுத்த ஐந்து தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.