9,593 பள்ளிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் - அரசு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளது.
9,593 பள்ளிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் - அரசு தேர்வுத்துறை உத்தரவு
x
தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளது.  பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கு மூன்றாயிரத்து 740 பள்ளிகளிலும், பதினொன்றாம் வகுப்பு பொது தேர்விற்கு இரண்டாயிரத்து 912 பள்ளிகளிலும், பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்விற்கு இரண்டாயிரத்து 941 பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மார்ச் 14, 18, 20, 22 ஆகிய தேதிகளில் மதிய வேளையில் பத்தாம் வகுப்பு மொழிப்பாட தேர்வுகள் நடைபெற உள்ளதால், சம்மந்தபட்ட பள்ளிகளில், பிற வகுப்பு மாணவர்களுக்கு 4 நாட்களும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்