நெல்லை : ரூ1 கோடி டெண்டரில் தரமில்லாத தார் சாலை
நெல்லையில் போராடி பெற்ற தார்சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நெல்லையில் போராடி பெற்ற தார்சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பணகுடியில் இருந்து குத்திரபாஞ்சான் அருவிக்கு செல்லும் பாதையில் தார்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதன் பலனாக சாலை அமைப்பதற்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் புதிய சாலை, மேற்பரப்பில் மட்டும் பெயரளவில் போடப்பட்டுள்ளதால், ஆங்காங்கே பெயர்ந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான சாலைகள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

