அரசுப் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதல் : 4 பேர் பலி

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
அரசுப் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதல் : 4 பேர் பலி
x
திண்டிவனம் அடுத்த விளங்கம்பாடி அருகே சென்னையில் இருந்து சென்ற அரசுப் பேருந்தும், எதிரே வந்த வேனும் பலமாக மோதி விபத்தனாது. இதில், பொதுமக்கள் போலீசார் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டதில் இரு குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண் ஆகிய நால்வரை ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேனில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், வேனில் வந்தது சென்னை கே.கே. நகரை சேர்ந்த அங்குசாமி என்பதும், பேருந்து ஓட்டுநர் கண் அயர்ந்ததால், விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்