சின்னதம்பி ஆபரேஷன் 2.0 பணிகள் தொடங்கியது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சின்னதம்பி ஆபரேஷன் 2.0 பணிகள் தொடங்கியது
x
உடுமலை அடுத்த கண்ணாடிபுத்தூர் பகுதியில் கடந்த 14 நாட்களாக காட்டு யானை சின்னதம்பி முகாமிட்டுள்ளது. அதனை காட்டுக்குள் விரட்டும் பல்வேறு கட்ட முயற்சி, தோல்வியில் முடிந்ததால், அதன் போக்கிலேயே விடப்பட்டது. இந்நிலையில், சின்னதம்பியை பிடிக்கும் பணிகள் இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. காலை 8 மணிக்கு கால்நடை மருத்துவர் குழு சின்னத்தம்பி முகாமிட்டுள்ள இடத்துக்கு வந்தனர். அதன் பின்னர் இரண்டு ஜே.சி.பி வாகனம் மூலம் சாய்வுதளம் அமைக்கும் பணி தொடங்கியது. அதேபோல் யானை ஏற்ற லாரி வரும் பாதை அகலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலீம், சுயம்பு இரண்டு கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளது. பணிகள் முடியும் பட்சத்தில் யானைக்கு மயக்க மருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாலை 3 மணிக்கு ஆப்ரேசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாரியில் யானையை ஏற்றிய பின்பு பொள்ளாச்சி வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்வதே, தற்போதைய திட்டம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்