பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை
பதிவு : பிப்ரவரி 12, 2019, 07:05 PM
தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
* தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரம்பு பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொல்லியல் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய,  மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் காமாரஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

* இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்ன ஆனது? என்றும், இதுவரை அது குறித்த அறிக்கையை ஏன் சமர்ப்பிக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினர்.

* தமிழர் நாகரீகம், பண்பாடு இவற்றை அறிவது முக்கியம் என கூறிய நீதிபதிகள், இதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை என கூறினர். 

* கீழடி அகழ்வாராய்ச்சியில் பல்வேறு சர்ச்சை எழுந்த நிலையில் இது போன்ற நிகழ்வுகளால் மத்திய  தொல்லியல் துறை மீது குற்றம் சாட்டப்படுகிறது எனவும், இதை தவிர்க்க குறிப்பிட்ட காலத்திற்குள் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

* கீழடி அகழ்வாராய்ச்சியில் பல்வேறு சர்ச்சை எழுந்த நிலையில் இது போன்ற நிகழ்வுகளால் மத்திய  தொல்லியல் துறை மீது குற்றம் சாட்டப்படுகிறது எனவும், இதை தவிர்க்க குறிப்பிட்ட காலத்திற்குள் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

* ஏரல் சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்தும் கோரிக்கை குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் தவறினால் சம்பந்தப்பட்ட தொல்லியல் அதிகாரிகளுக்கு சம்மன் பிறப்பிக்கப்படும் எனவும் கூறி வழக்கை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்

நடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்

145 views

தொழில் நுட்ப வளர்ச்சியோடு தமிழ் மொழியை வளர்க்க என்ன செய்யலாம்?

தொழில் நுட்பங்களின் உதவியோடு தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் குறித்து, தொழில்நுட்ப வல்லுநர் செல்வ முரளி கூறும் தகவல்கள்

138 views

18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

724 views

செப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு

செப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

295 views

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய பெண்களை ஏமாற்றுவது அதிகரிப்பு - சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு

வெளிநாட்டு வாழ் இந்திய கணவர்கள் இந்தியாவில் பெண்களை திருமணம் செய்து கைவிடுவது அதிகரிப்பதால் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

930 views

பிற செய்திகள்

மயிலாடுதுறை : களைகட்டிய தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

38 views

ராணிப்பேட்டை : சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

23 views

திருவண்ணாமலை : ரூ. 4 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது.

13 views

"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி

சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

53 views

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

18 views

கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு : 5 வது நாளாக விவசாயிகள் போராட்டம்

தரங்கம்பாடி அருகே விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 5வது நாளாக போராட்டம் நடத்தினர்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.