மருமகனை அரிவாளால் வெட்டி சாய்த்த மாமனார்...

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மகளுடன் வாழ மறுத்த மருமகனை வெட்டி கொன்ற மாமனார் போலீசில் சரணடைந்தார்.
மருமகனை அரிவாளால் வெட்டி சாய்த்த மாமனார்...
x
சீலை பிள்ளையார் புதூர் பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி பிச்சாண்டி, கடந்த 3 ஆண்டுகளாக முன்பு வனிதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் இடையே பலமுறை சமரசம் செய்தும் பிச்சாண்டி, மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வனிதாவின் தந்தை மாணிக்கம்,  பிச்சாண்டியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காட்டுப்புத்தூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசில் சரணடைந்த மாமனார் மாணிக்கத்திடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மாணிக்கத்தின் உறவினர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்