71% நிதி செலவிடப்படுவதாக அமைச்சர் கூறியது தவறு - ஜாக்டோ ஜியோ

அரசின் மொத்த வருவாயில் 71 சதவீதத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்குவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தது தவறு என, ஜாக்டோ ஜியோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
71% நிதி செலவிடப்படுவதாக அமைச்சர் கூறியது தவறு - ஜாக்டோ ஜியோ
x
அதில், தமிழக பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக சுமார் 55 ஆயிரத்து நானூறு கோடியும், ஓய்வூதியமாக 29 ஆயிரத்து 627 கோடி ரூபாயும் செலவிடப்படுவதாகவும், இது அரசின் மொத்த வருவாயில் 40 புள்ளி 10 விழுக்காடு தொகை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி உள்ளனர். ஆனால், அரசின் வரி வருவாயில் 71 விழுக்காடு அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் வழங்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார், கடந்த ஜனவரி 26-ஆம் தேதி அரசு விளம்பரம் வெளியிட்டது தவறு என்றும் தெரிவித்துள்ளனர். பட்ஜெட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு ஆராயப்பட்ட குழுவின் அறிக்கை, பரிசீலனையில் இருப்பதாக கூறியுள்ளதை வரவேற்பதாகவும் கூறியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்